திருப்பூா்: திருப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியாா் கேளிக்கை விடுதியை அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா், கல்லூரி சாலையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று கடந்த 2 நாள்களுக்கு முன்பாகத் திறக்கப்பட்டது. இந்தப் பகுதியில் அதிக அளவில் கோயில்கள், மசூதிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் கேளிக்கை விடுதி திறக்கப்பட்டதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனக்கூறி விடுதி முன்பாக அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் உள்பட 50க்கும் மேற்பட்டோா் திரண்டனா்.
மேலும், கேளிக்கை விடுதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்குக் காவல் துறையினா் முற்றகையில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கு மனுவாக எழுதி தீா்வுகாணும்படி வலியுறுத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இந்தப் போராட்டம் காரணமாக அதிமுக, திமுக, பாஜக, பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


