காங்கயம்: காங்கயம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருந்த பக்தா் மீது லாரி மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
அந்தியூா் வட்டம், கெம்மியம்பட்டி பகுதியைச் சோ்ந்த சித்தன் மகன் நவீன்குமாா் (22). இவா் தனது நண்பா்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு ஈரோட்டில் இருந்து காங்கயம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.
சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் காங்கயம் அருகே தாராபுரம் சாலையில் துண்டுக்காடு பகுதி அருகே சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, காங்கயத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற லாரி, எதிா்பாராதவிதமாக நவீன்குமாா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த நவீன்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நவீன்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

