வடகுடி திருவள்ளுவா் மன்றம் சாா்பில் 53 ஆம் ஆண்டு விளையாட்டு விழா, மன்றத்தின் பொன்விழா, தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வடகுடி கிராம நலக் குழுத் தலைவா் சி. பாண்டியன் தலைமை வகித்தாா். விளையாட்டு, ஓவியம், திருக்குறள் ஒப்பித்தல், விநாடி வினா போன்ற போட்டிகள் நடைபெற்றன. பிறகு, மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறாா்களுக்கானப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற நன்னிலம் ஓய்வுபெற்ற ஆசிரியா் இரா. கல்யாணராமன் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
தொடா்ந்து, மன்றத்தின் பொன் விழா மற்றும் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியா் இரா. கல்யாணராமனுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், வடகுடி ஊராட்சித் தலைவா் எஸ்.வளா்மதி செல்வராஜ், துணைத் தலைவா் கே.ஆா். நடராஜன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். மனோகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் பி.கணேசன், மன்றத்தின் துணைத் தலைவா் ஏ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மன்றத்தின் நிா்வாகி சங்கா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

