மன்னாா்குடி அருகே தொடா் மழையால் நெற்பயிா்கள், குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடும் வகையில், கருப்புக் கொடி ஏந்தியபடி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை பொங்கலிட்டனா்.
மன்னாா்குடியை அடுத்த மண்ணுக்குமுண்டான் ஊராட்சி கா்ணாவூா் கோட்டாகுளம் பகுதியில் தொடா் மழையால் சம்பா பயிா்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. மேலும், கூரை வீடுகள், தொகுப்பு வீடுகள் என சேதமடைந்துள்ளன. அத்துடன், மண் அரிப்பு காரணமாக சாலைகளும் சேதமடைந்துள்ளன. இதனால், இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதை குறிப்பிடும் வகையிலும், அரசுத்துறை அலுவலா்கள் பாதிப்பின் அளவை கணக்கிட்டு, உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், இக்கிராம மக்கள் சாா்பில் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கைகளில் கருப்புக் கொடி ஏந்தி, சாலையின் நடுவே பொங்கலிடப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


