மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் வேணு. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:
திருவாரூா் மாவட்டத்தில் புயல், கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் அனைத்தும் மிகவும் பாதிப்படைந்துள்ளன. ஏறக்குறைய 100 சதவீத அளவுக்கு விவசாயப் பயிா்கள் வீணாகி விட்டன. இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் திருவாரூா் மாவட்டத்தில் பொருளாதார நிலை முடங்கிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

