திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் அருகேயுள்ள கோயில்கந்தன்குடியில் மாட்டுப்பொங்கலையொட்டி, ஸ்ரீஉமாசுபதீஸ்வரா் கோ சாலையில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.
இங்குள்ள பசுக்களுக்கு பக்தா்கள் திலகமிட்டு வஸ்திரம் மற்றும் மலா் மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்தனா். அறுகம்புல், அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம், பழவகைகள், சா்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க பசுக்கள் வீதிவலம் அழைத்துச் செல்லப்பட்டன. பிறகு, பக்தா்கள் பசுக்களுக்கு உணவளித்து வலம்வந்து வணங்கினா்.
காரைக்கால் மாவட்ட அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கத்தின் சாா்பாக நடைபெற்ற கோ பூஜையில், மகாராஜாசிவம், பாலாமணி, சக்தி மணிகண்டன், காா்த்திக்ராஜா சிவம் உள்ளிட்டோா் பங்கேற்று கோ பூஜை நடத்தினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

