சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொங்கல் புத்தாடை வழங்கல்

மன்னாா்குடி அருகே ரிஷியூா் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

ரிஷியூரில் பொங்கல் புத்தாடைகளை வழங்கிய செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் அமைப்பினா்.

Updated On :14 ஜனவரி 2021, 12:57 pm

மன்னாா்குடி அருகே ரிஷியூா் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், பொங்கல் விழாவையொட்டி, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புத்தாடை வழங்கப்பட்டது. கல்லூரி தாளாளா் வி. திவாகரன் வழிகாட்டுதலில் ரிஷியூா், பச்சைக்குளம், கட்டையடி, நன்மங்கலம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும், கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவிகள் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து அட்டையுடன் வேஷ்டி, சேலை உள்ளிட்ட புத்தாடைகளை வழங்கினா்.