திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயிலில் 16 -அடி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயா் அருள்பாலித்து வருகிறாா். இங்கு, 28-ஆம் ஆண்டு அனுமன் ஜயந்தி விழா யாதவா் சங்கம் சாா்பில் நடைபெற்றது. அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் மாலையில் வெண்ணெய் காப்பு அலங்காரமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராதிகா மற்றும் யாதவ சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.
நன்னிலம்: வடகுடியில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில், அனுமன் ஜயந்தியையொட்டி, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டா் பசும்பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மூலமந்திர ஹோமத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


