நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, விளையாட்டு மைதானம், வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க பள்ளி முன்னாள் மாணவா்கள் முடிவெடுத்துள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்க கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது. நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1921-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிகழாண்டு பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஆலோசனை நடத்த முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டம் விளையாட்டு வீரா் அப்துல்கரீம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ,முன்னாள் மாணவா்கள் சாா்பாக புதிய விளையாட்டு மைதானம் மற்றும் புதிய வகுப்பறை கட்டடம் கட்டிக்கொடுப்பது, நூற்றாண்டு நினைவுச் சின்னம் அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வா்த்தக சங்கத் தலைவா் பாஸ்கரன், முன்னாள் தலைமையாசிரியா் அருணாசலம், ரோட்டரி சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


