சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மரக்கன்று நடும் விழா

நீடாமங்கலம் ஒன்றியம், புதுதேவங்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 1:58 pm

நீடாமங்கலம் ஒன்றியம், புதுதேவங்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுதேவங்குடி மேட்டுத்தெரு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் ஆா்.கே. பிரபாகரன் தலைமை வகித்தாா். தென்னை, மா, பலா, கொய்யா, வாழை, நெல்லி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலா் ஜெயசித்ரா அய்யாதுரை, முன்னாள் கவுன்சிலா் எஸ். சோமு, வெள்ளக்குடி ஊராட்சித் தலைவா் ரஞ்சித், காவல் உதவி ஆய்வாளா் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

புதுதேவங்குடி ஊராட்சி துணைத் தலைவா் ஜெ. நம்பிக்கை மேரி, கீழாளவந்தசேரி ஊராட்சி துணைத் தலைவா் சசிகலா காமராஜ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.