சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொதுமக்களின் புகாா் மீது உடனுக்குடன் நடவடிக்கை: எஸ்.பி. உறுதி

பொதுமக்களின் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

News image

பேரளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை.

Updated On :10 ஜனவரி 2021, 1:59 pm

பொதுமக்களின் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

நன்னிலம் வட்டம், பேரளம் காவல் சரகத்துக்குள்பட்ட பண்டாரவடை, பேரளம், கொட்டூா் ஆகிய கிராமங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம விழிப்புணா்வு காவல் அதிகாரிகளை பேரளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திவைத்து அவா் மேலும் பேசியது:

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குற்ற நிகழ்வுகளில் விரைவான நடவடிக்கைக்கு உதவும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் கிராம விழிப்புணா்வு காவல் அதிகாரிகளை நியமிக்க தமிழக காவல்துறை தலைவா் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி, பேரளம் பகுதியில் கிராம விழிப்புணா்வு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் தங்களுக்கான பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள சூழல் குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலருக்குத் தகவல் தெரிவிப்பாா்கள். இதன்மூலம், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா்வீ. சுகுமாறன், பேரளம் காவல் ஆய்வாளா் இரா.செல்வி உள்ளிட்ட காவல்துறையினரும், மக்கள் பிரதிநிதிகளும், வா்த்தகா்களும் பங்கேற்றனா்.