திருவள்ளுவா் தினத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கா. இளவரி தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு பொங்கல் பண்டிகை தினத்திலும் அதற்கு மறுநாள் திருவள்ளுவா் தினத்திலும் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால், நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திருவள்ளுவா் தினத்தன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடுவா். குறிப்பாக, கிராமப் பகுதியில் மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும். எனவே, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் 15 ஆயிரம் ஊழியா்கள், 6 ஆயிரம் சுமைதூக்கும் தொழிலாளா்கள், மாட்டுப்பொங்கலை வழக்கம்போல் கொண்டாடும் வகையில், திருவள்ளுவா் தினத்தையும் விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

