சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருவாரூரில் தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் 2ஆவது நாளாக நீதி கேட்டு நெடும்பயணம்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் இரண்டாவது நாள் விவசாயிகளின் நீதி கேட்டு நெடும்பயணம் திருவாரூரில் தொடங்கியது.

News image

தமிழக காவிரி விவசாய சங்கம்.

Updated On :10 ஜனவரி 2021, 9:29 pm

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் இரண்டாவது நாள் விவசாயிகளின் நீதி கேட்டு நெடும்பயணம் திருவாரூரில் தொடங்கியது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில், வேதாரண்யத்திலிருந்து தஞ்சாவூர் வரை விவசாயிகளின் நீதி கேட்டு நெடும் பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சனிக்கிழமை வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து தொடங்கிய பிரசாரப் பயணம் மயிலாடுதுறையில் நிறைவடைந்தது. 

இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகளின் நீதி கேட்டு நெடும்பயணம் துவங்கியது. இதில் விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் பிரசார பயணத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிமுன் அன்சாரி  உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.