சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கூத்தாநல்லூர்: ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத மாணவர்களையும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத மாணவர்களையும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தார். 

News image

அத்திக்கடை, பொதக்குடியில், மனிதநேய ஜனநாயகக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்ேகற்ற மு.தமிமுன் அன்சாரி.

Updated On :10 ஜனவரி 2021, 10:27 pm

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத மாணவர்களையும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கூத்தாநல்லூர் அடுத்த அத்திக்கடை, பொதக்குடியில், மனிதநேய ஜனநாயகக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்ேகற்ற, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தார். 
தொடர்ந்து அவர் பேட்டியில் கூறியது, தில்லியில் 46 ஆவது நாளாக விவசாயிகள் வீரம் மிக்க போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். சுதந்திர வரலாற்றில் உலகத்தையே கவரக் கூடிய அளவுக்கு அறப்போராட்டத்தை நடத்துகிறார்கள். இதுவரை 64 விவசாயிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவைக் பாதுக்காக்க எல்லையில் ராணுவ வீரர்கள் போராடுகிறார்கள். நம் வாழ்வாதாரத்தைக் காக்கப் போராடுகிறார்கள் விவசாயிகள். ராணுவ வீரர்களும், விவசாயிகளும் ஒன்றுதான். விவசாயிகளைப் புறக்கணிக்கும் எந்த அரசும் உலகத்தில் வெற்றி பெற்றதில்லை. 
சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்த பிறகு நடத்தும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ப, 23 ஆம் தேதி மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில், திருநெல்வேலியில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே, அதிமுக கூட்டணியிலிருந்து, ம.ஜ.கட்சி வெளியேறி விட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி இருந்தால், அதன் நிழலைக் கூட நாங்கள் தொடமாட்டோம். தமிழகத்தில், திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.,வின் முதல் குறிக்கோள். பாஜகவின் முதல் இலக்கு அதிமுகதான். 
அதிமுக தலைமையிடத்தில் உள்ள பலகீனத்தைப் பயன்படுத்தி, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள். இதை அந்தக் கட்சியின் அமைச்சரே சொல்கிறார். இதற்கு அதிமுக தலைமையும் துணைப் போகிறது. அதிமுக மூலம் தமிழகத்தில் பாஜக நுழையப் பார்க்கிறார்கள். இது வட இந்தியா இல்லை. இது தமிழகம். தமிழகத்தில் பாஜக தோல்வியைத்தான் பெறும். தமிழ்நாட்டின் நலனும், உரிமைகளும், வாழ்வாதாரங்களும், தமிழ் மொழியின் தொன்மைகளும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதில் எப்போதும் தமிழக மக்கள் சமரசம் செய்ய மாட்டார்கள். 
மக்களுக்காகப் போராடி, களத்தில் நின்றவர்கள் அரசியல் பேசலாம். அரிதாரம் பூசிவிட்டு, கன்னங்கள் தொங்கிய பிறகு, வயதானவுடன் அரசியலுக்கு வருவது சரியில்லை. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தொடக்கத்திலிருந்து களத்தில் இறங்கியவர்கள். பல்வேறு சிறிய பொறுப்புகளை வகித்துதான் உயர்ந்தார்கள். ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்துள்ள, சேராத மாணவர்கள் எனப் பிரித்துப் பார்க்காமல், 9 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், தமிழக அரசு 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் போன் வழங்கி, 6 மாதத்திற்கு ரீஜ் ஜார்ஜ் செய்ய வேண்டும். 
தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் வாழ்வாதாரம், தமிழ் மொழியின் பண்பாடுகளை பாதுக்காக்கும் வகையில் வலிமையான கூட்டணி அமைக்கப்பட வேண்டும். அந்தக் கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி இடம் பெறும். தமிழ்நாட்டின் நலனை கபளீகரம் செய்யும் எந்தக் கூட்டணியிலும் ம.ஜ.க.இணையாது. சமூக நீதியை காவுக் கொடுக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என பேட்டியளித்தார். பேட்டியின் போது, மாவட்டச் செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.