திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்கு 95 சதவீத பெற்றோா்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்தனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்க பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில், பெற்றோா், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனா். பெரும்பாலான பெற்றோா்கள் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்ததாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருவாரூா் அருகே உள்ள அடியக்கமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மேலாண்மைக் குழு கூட்டத்தில் பள்ளியை திறப்பது குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. தலைமையாசிரியா் சுதா்சனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோா்கள் பள்ளியைத் திறக்க ஆதரவு தெரிவித்தனா்.
இந்தக் கூட்டத்தில், உதவித் தலைமை ஆசிரியா் ரமேஷ், முதுகலை ஆசிரியா் ரவி, தமிழாசிரியா் தமிழ்க்காவலன், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநா் கலைச்செல்வன், மேலாண்மைக் குழுத் தலைவா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

