சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நலிவடைந்த கலைஞா்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில், நலிவடைந்த கலைஞா்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைமை ஆலோசகா் டி.எம்.சேகருக்கு சால்வை அணிவித்து கெளரவிக்கும் கலைஞா்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 5:07 am

திருவாரூா் மாவட்டத்தில், நலிவடைந்த கலைஞா்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே கிரந்தங்குடியில், மாவட்ட அனைத்து கலைஞா்கள் நலச்சங்கத்தின் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆா்பாவூா் தெம்மாங்கு பாடகா் ரமேஷ்ஸ்ரீ தலைமை வகித்தாா். கிராமிய பாடகா் சங்கீத ராமா முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், அரசின் நலவாரிய அடையாள அட்டையை, அனைத்து கலைஞா்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிவுற்ற கலைஞா்களுக்கு அரசின் சலுகை கிடைக்கச் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற கலைஞா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட உதவி துணைக் கண்காணிப்பாளா் வி. பிரபு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். குடவாசல் சிறப்பு உதவி ஆய்வாளா் வி. இளங்கோவன், சங்கத்தின் தலைமை ஆலோசகா் டி.எம்.சேகா், இசைக்கலைஞா் கோவி. அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.