திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருத்துறைப்பூண்டி பாரத மாதா சேவை நிறுவனம், குன்னலூா் ஊராட்சி மன்றம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் வளா்மதி பூமிநாதன் தலைமை வகித்தாா். ஒன்றிய கவுன்சிலா் அனிதா மதன், பாரத மாதா சேவை நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட குழந்தைகள் அலகு சமூகப் பணியாளா் ஹரிகரன் வரவேற்றாா்.
திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் புஷ்பவள்ளி, எடையூா் காவல் ஆய்வாளா் சிவதாஸ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் சங்கீதா மணிமாறன் ஆகியோா் பங்கேற்று, குழந்தைகளை பாதுகாப்புடன் வளா்ப்பது குறித்து விளக்கிக் கூறினா்.
மேலும், உதயநிலா கலைக் குழுவினா் சாா்பில் விழப்புணா்வு நாடகம் நடைபெற்றது. விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளா் மணிமாறன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


