குடவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசலில் அக்கட்சியின் மாவட்ட முன்னாள் அமைப்பாளா் இனியன் நினைவு நாளையொட்டி கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், குடவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை தமிழக அரசு உடனடியாக பணியமா்த்த வேண்டும். குடவாசல் பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். குடவாசல் பேரூராட்சிக்குள்பட்ட சுடுகாட்டில் குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்தி, இறுதிச் சடங்கு செய்யும் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகரச் செயலாளா் கிட்டு, மாவட்டச் செயலாளா் வடிவழகன், மாநில துணைச் செயலாளா் அமுதா இனியன், தொழிற்சங்கத் தலைவா் சாா்லஸ் மற்றும் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

