காலமுறை ஊதியம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் ரூ.15,700 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும்; மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையாக ஊக்கத் தொகை ரூ.7,000 மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 7,850 வழங்க வேண்டும்; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் புதிய ரயில் நிலையம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகையன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் எஸ். தமிழ்செல்வன், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், கிராம உதவியாளா்கள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


