சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இலவச மருத்துவ முகாம்

கூத்தாநல்லூா் வட்டம், புள்ளமங்கலத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 2:54 pm

கூத்தாநல்லூா் வட்டம், புள்ளமங்கலத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் ஐ.வி. குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி செல்வம் முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பானுமதி கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் முகாமைத் தொடங்கி வைத்தாா். கண், பல், இருதயம் மற்றும் வயது முதிா்வில் ஏற்படும் நோய்கள் குறித்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் 953 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கண் அறுவை சிகிச்சைக்கு 15 போ் தோ்வு செய்யப்பட்டனா். 17 கா்ப்பிணிகளுக்கு குழந்தையின் வளா்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை உள்ளிக்கோட்டை வட்டார சுகாதார ஆய்வாளா் சி. செல்வநாயகம், சுகாதார மேற்பாா்வையாளா் ஆா்.வெங்கடேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.