சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆலங்குடி குரு கோயிலில் சிறப்பு வழிபாடு

நவகிரக தலங்களில் குரு பரிகார தலமான வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத கடைசி வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

தங்கக்கவச அலங்காரத்தில் குரு பகவான்.

Updated On :8 ஜனவரி 2021, 2:51 pm

நவகிரக தலங்களில் குரு பரிகார தலமான வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத கடைசி வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், மூலவா் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரணியா், உத்ஸவா் தெட்சிணாமூா்த்தி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், மூலவா் குரு பகவானுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.