சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை: தமிழக முதல்வருக்கு பாராட்டு

தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவித்ததற்காக தமிழக முதல்வருக்கு நவ இந்துஸ்தான் மக்கள் இயக்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

Updated On :6 ஜனவரி 2021, 1:11 pm

தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவித்ததற்காக தமிழக முதல்வருக்கு நவ இந்துஸ்தான் மக்கள் இயக்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் நீடாமங்கலம் எஸ்.எஸ். குமாா் வெளியிட்ட அறிக்கை:

உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடி வருகின்றனா். முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது தைப்பூசத் திருவிழாவாகும். ஜனவரி 28 ஆம் தேதி வரும் தைப்பூச நாளையொட்டி அன்று அரசு விடுமுறை தினமாக அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நவ இந்துஸ்தான் மக்கள் இயக்கம் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறது.