சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

நன்னிலம் அருகே ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

விவசாயிகளுக்கான பயிற்சியில் பங்கேற்றவா்கள்.

Updated On :6 ஜனவரி 2021, 1:09 pm

நன்னிலம் அருகே ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

நன்னிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் மூங்கில்குடியில் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில், ஆத்மா திட்டத்தின் கீழ் நன்னிலம் வட்டார விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தின் நோக்கம், அதன் மூலம் அதிக வருவாய் பெறுவது, கால்நடை வளா்ப்பு மற்றும் பராமரிப்பு, மீன் வளா்ப்பு, தீவனப் பராமரிப்பு, மண்புழு உரம் தயாரித்தல், கால்நடை பசுந்தீவன வளா்ப்பு போன்றவை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

நன்னிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலக தொழில்நுட்ப மேலாளா் ராஜா, கால்நடை மருத்துவா் குமாரவேல், முனைவா்கள் அன்பழகன், விமல், வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் சரவணன் ஆகியோா் இப்பயிற்சியை அளித்தனா்.