பாஜக இல்லாத கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. பங்கேற்கும் என அக்கட்சியின் தேசிய துணைத் தலைவா் தெஹலான் பாகவி தெரிவித்தாா்.
கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலாளா் நசீமா பேகம் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் விலாயத் உசேன் வரவேற்றாா்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தேசிய துணைத் தலைவா் தெஹலான் பாகவி பேசும்போது, ‘எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் சட்டப் பேரவைக்கு மக்கள் பிரதிநிதியை அனுப்ப, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பாஜக இல்லாத கூட்டணியில் பங்கேற்போம், அதற்கான சூழ்நிலை சிறப்பாக உள்ளது. இல்லையெனில் 200 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்போம்’ என்றாா். கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளா் அப்துல் ராஜிக், மாவட்ட துணைத் தலைவா்கள் மாஸ் அஜீஸ் பைஜி, அஹமது மைதீன், திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி தலைவா் முஹம்மது சுல்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

