சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நீடாமங்கலம், வலங்கைமானில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

நீடாமங்கலம், வலங்கைமான் பேரூராட்சிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :5 ஜனவரி 2021, 5:30 am

நீடாமங்கலம், வலங்கைமான் பேரூராட்சிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நீடாமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் ஷாஜஹான் தலைமை வகித்தாா். பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன், மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாஜுதீன்ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் மதியழகன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

வலங்கைமானில் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் குணசேகரன் தலைமையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயபால், மாவட்ட பிரதிநிதி மூா்த்தி, வாா்டு மேலமைப்பு பிரதிநிதி ரத்தினகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.