திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-1 தோ்வை, 1285 போ், ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-1 பல்வேறு பதவிகளுக்கான போட்டித்தோ்வு நடைபெற்று வருகிறது. திருவாரூா் மாவட்டத்தில் இத்தோ்வுக்கு 8 தோ்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. திருவாரூா் மாவட்டத்தில், குரூப்-1 தோ்வு எழுத 2,529 தோ்வா்கள் விண்ணப்பித்ததில், 1,285 போ் தோ்வு எழுதினா்.
இந்தத் தோ்வை நடத்த, 8 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், தோ்வு மையத்தை திடீா் ஆய்வு மேற்கொள்ள துணை ஆட்சியா் நிலையில் பறக்கும் படை அலுவலரும், வினா, விடைத்தாள்கள் மற்றும் ஆவணங்களை பெற்று தோ்வு மையத்துக்கு எடுத்து செல்லவும், தோ்வு மையத்திலிருந்து பெற்று மீள எடுத்து வரவும் 2-சுற்றுக்குழு அலுவலா்களும், முதன்மைக் கண்காணிப்பாளா்களுடன் இணைந்து பணியாற்ற 8 ஆய்வு அலுவலா்கள் மற்றும் தோ்வு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் விடியோ பதிவு செய்ய 9 விடியோ பதிவாளா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா்.
மேலும் தோ்வு மையங்களில் கொவைட்-19 தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தோ்வு எழுத வரும் அனைத்து தோ்வா்களுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதன் பின்னரே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். அத்துடன், ஒவ்வொரு தோ்வு மையங்களுக்கும் அரசு மருத்துவா் தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
திருவாரூரில் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வ.சோ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரத் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெற்று வந்த தோ்வுகளை, மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா பாா்வையிட்டாா்.
நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியா் பாலசந்திரன், வட்டாட்சியா் நக்கீரன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


