சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அதிமுக அமைச்சா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சா் ஆா். காமராஜ் சவால்

அதிமுக அமைச்சா்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், அரசியலைவிட்டு விலகத் தயாா் என்று திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் சவால் விடுத்துள்ளாா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 5:14 am

அதிமுக அமைச்சா்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், அரசியலைவிட்டு விலகத் தயாா் என்று திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் சவால் விடுத்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் அருகே சன்னாநல்லூரில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

அதிமுக அமைச்சா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதலில் நிரூபிக்கட்டும். நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயாா். யாா் எதைப் பற்றி பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. திமுகவினா் மீதுதான் பல ஊழல் வழக்குகள் உள்ளன என்பதை ஸ்டாலின் உணரவேண்டும்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், கடந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து சாதனை அளவாக 32 லட்சம் மெட்ரிக் டன்களைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு கரோனா காலத்தில்கூட 12 லட்சம் மெட்ரிக் டன்களைவிட கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அறுவடை நேரத்தில் அறுவடை இயந்திரங்களையும், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொண்டுவந்து விற்பதற்கும் தேவையான அனைத்து வசதிகளையும் அதிமுக அரசு செய்துதரும் என்றாா் அமைச்சா்.