சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தனியாரைவிட அரசு விற்பனை நிலையங்களில் கூடுதல் விலையில் விதைநெல்

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் விதைநெல் விற்பனை நிலையத்தைவிட அரசு விற்பனை நிலையங்களில்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:08 pm

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் விதைநெல் விற்பனை நிலையத்தைவிட அரசு விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு விதை நெல் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை சுமார் 50,000 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்புப் பணி நடைபெற்றுள்ளது. நடவுப் பணிக்காக 91 ஹெக்டேரில் நாற்றுவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது சாகுபடி நிலங்களில் சேற்று உழவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

சம்பாவுக்கு சுமார் 3,000 மெட்ரிக் டன் விதை நெல் தேவைப்படுமென கணக்கிடப்படுகிறது. இந்த விதை அரசு விதை நெல் விற்பனை மையங்களில் விதை நெல் கிலோவுக்கு ரூ. 5 மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விதை கிராமத் திட்டத்தை அரசு அறிவித்து அதன்படி ஏக்கருக்கு 20 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் அரசு விற்பனை நிலையங்களில் விதை நெல் விற்கப்படுகிறது. அரசு அறிவித்த விதை கிராமத் திட்டத்தின்படி விதை நெல் ஏற்கெனவே விதை தீர்ந்து விட்டது என்றும்,  அதனால் 50 சதவீத மானியம் வழங்க இயலாது  என்று விதை வாங்கச் செல்லும் விவசாயிகளிடையே  அரசு அலுவலர்கள் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது.

இதுகுறித்து வேளாண் துணை இயக்குநர் க. மயில்வாகனன் கூறியது: திருவாரூர் மாவட்டத்திலுள்ள 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் 500 டன் விதை கிராமத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. தவிர 42 வேளாண்மை விரிவாக்க மையங்களில் இத்திட்டத்தில்  200 டன் விதை நெல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு விற்பனை மையங்களில் சிஆர் 1009 விதை நெல் முடிந்துவிட்டதால், ஆடுதுறை 38, 39, 46 ரக விதை நெல் விற்பனை செய்யப்படுகிறது. விதைப் பண்ணைகளிலிருந்து வேளாண்துறை கொள்முதல்  செய்து நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விதையை  விற்பனை செய்கிறது. தனியார்  நிறுவனங்கள் வியாபார நோக்கில் விலையை குறைத்து விற்பதால் தற்போது  விதை நெல் விற்பனையில் ஏற்பட்டுள்ள  வித்தியாசத்துக்கு காரணம். தற்போது வரை 49,200  ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்புப் பணி நிறைவடைந்துள்ளன. 29,200 ஹெக்டேருக்கான நாற்று  தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்  அவர்.ஸ்