சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வருவாய் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:47 pm

வருவாய் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய் கிராம  உதவியாளர் சங்க வட்டத் தலைவர்  வி. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

வட்டச் செயலர் எஸ். குருநாதன், வட்ட  இணைச் செயலர் ஆர். முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க மாநிலப் பொதுச் செயலர்  எஸ். தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர்  இ. ஜெயபாஸ்கர், வருவாய்த் துறை அலுவலர் சங்க வட்டச் செயலர் ஆர். கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்து பேசினர்.