சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவல்துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

திருவாரூர் அருகே பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தடை விதித்த மாவட்ட காவல்துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:46 pm

திருவாரூர் அருகே பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தடை விதித்த மாவட்ட காவல்துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் வீரசேனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே குறிச்சிமூலை ஊராட்சி நடுவக்களப்பால்  கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் அமைதியின்மையும், அச்சமும் நிலவி வருகிறது.

 மாவட்டக்குழு சார்பில் ஆக. 26-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு ஆகியோர் பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.