சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காஞ்சிக்குடிக்காட்டில் குறைகேட்புக் கூட்டம்

மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட காஞ்சிக்குடிக்காடு ஊராட்சியில் அண்மையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:10 pm

மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட காஞ்சிக்குடிக்காடு ஊராட்சியில் அண்மையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக்  கேட்டு, மனுக்கள் பெற்றார்.

அப்போது அவர் கூறியது:

பழுதடைந்துள்ள வடக்கு தெரு சாலையை செப்பணிட உத்தேச மதிப்பீடு கோரப்பட்டுள்ளது.

மதிப்பீடு பெறப்பட்ட பின் சாலையை சீரமைக்கத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பகுதி நேர அங்காடி சேதமடைந்துள்ளதால் புதிய கட்டடம்  கட்டுவதற்கும், பொது நிகழ்ச்சிகள் நடத்திட கலையரங்கம் அமைக்கவும்  தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜா.