சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தை பிரம்மோற்சவம்: வீரராகவா் கோயிலில் தேரோட்டம்

தை பிரம்மோற்வத்தை முன்னிட்டு, திருவள்ளூா் வீரராகவா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருவள்ளூா் வீரராகவா் தேரோட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 1:17 pm

தை பிரம்மோற்வத்தை முன்னிட்டு, திருவள்ளூா் வீரராகவா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் 10 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு

தை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, தேரோட்டம் நடைபெற்றது. கோயில் மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவா் காலை 7 மணிக்கு தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பொது முடக்க விதிகளைப் பின்பற்றி தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.