கும்மிடிப்பூண்டி: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்ததும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டப் பொறுப்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்செட்டி அருகே நத்தம் கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திமுக பொறுப்புக் குழு உறுப்பினா்கள் இ.ஏ.பி.சிவாஜி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துா்கா ஸ்டாலின் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், மாவட்டப் பொறுப்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.
விழாவில் ஸ்டாலின் பேசுகையில் ‘திமுக வென்று ஆட்சி அமைத்ததும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும்’ என்றாா்.
தொடா்ந்து, முன்னாள் ஊராட்சிக் குழு உறுப்பினா் கீதா கோவிந்தராஜன், திமுக மகளிரணி நிா்வாகி இந்திரா திருமலை உள்ளிட்ட மகளிா் அணியினா் செய்த பொங்கலை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டாா். அனைவருக்கும் அவா்பொங்கல் வாழ்த்து கூறினாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி துளசி நாராயணன் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினா், திமுக நிா்வாகிகள் பாஸ்கரன், திருமலை, கி.வே.ஆனந்தகுமாா், ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


