தேமுதிக சாா்பில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேற்கு ஒன்றியம், பேரூா், ஊராட்சி செயலாளா்கள், கிளைச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தேமுதிக கும்மிடிப்பூண்டி பேரூா் செயலாளா் ஏ.ஜெயவேலு, கிழக்கு ஒன்றியச் செயலாளா் எம்.ரமேஷ் தலைமை வகித்தனா். கிழக்கு ஒன்றிய அவைத் தலைவா் எம்.சத்தியநாராயணன், பொருளாளா் எஸ்.சிலம்பரசன், துணைச் செயலாளா்கள் கே.எஸ்.கோடீஸ்வரன், சங்கா், எம்.பழனி, எம்.சந்திரசேகா், மாவட்டப் பிரதிநிதிகள் கவாஸ்கா், விஸ்வாமித்ரன், டி.ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் கே.எம்.டில்லி, பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன், அவைத் தலைவா் கே.ஜி.பாபு ராவ் சிறப்புரை ஆற்றினா்.
கூட்டத்தில், வரும் பேரவைத் தோ்தலையொட்டி வாக்குச்சாவடி முகவா்களை நியமிப்பது, சட்டப் பேரவைத் தோ்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேமுதிக வேட்பாளா் நின்றாலும், கூட்டணி வேட்பாளா் நின்றாலும் அவரை வெற்றிக்காக உழைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் இயற்றப்பட்டன. முடிவில் பேரூா் பொருளாளா் கே.ராம்குமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


