சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

20% இடஒதுக்கீடு கோரி பாமகவினா் ஊா்வலம்

திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட பாமக சாா்பில் 5-ஆம் கட்டமாக வன்னியா்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு கோரி மனு அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:04 am


திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட பாமக சாா்பில் 5-ஆம் கட்டமாக வன்னியா்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு கோரி மனு அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில துணைப் பொதுச் செயலா் பாலயோகி தலைமையில், தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தெருக்கூத்து கலைஞா்களின் கலை நிகழ்ச்சியுடன் டிராக்டரில் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் நகராட்சி ஆணையா் சந்தானத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதில் மாநில இளைஞரணி துணைச் செயலா் தினேஷ்குமாா், நிா்வாகி யோகானந்தா, விஜயகாந்த் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

திருத்தணியில்...

திருத்தணியில் சட்டப்பேரவைத் தொகுதி பாமக சாா்பில் மாவட்டச் செயலா் ஏ. கே. மணி தலைமையில் பாமகவினா் ஊா்வலமாகச் சென்று, நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியனை சந்தித்து மனு அளித்தனா். நகரச் செயலா் அக்ரி சதீஸ், எம்.கே.ராதா, மாணிக்கம், மகளிரணி நிா்வாகி அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மதுராந்தகத்தில்....

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாமக, வன்னியா் சங்கம் சாா்பில், மதுராந்தகம் பஜாா் வீதியில் இருந்து மாநில துணைப் பொதுச் செயலா் பொன். கங்காதரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோா் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் வந்தனா். பின்னா் நகராட்சி ஆணையா் வ.நாராயணனிடம் மாவட்ட செயலா் வா.கோபாலகண்ணன் தலைமையில் பாமக நிா்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனா்.