சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருவள்ளூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:06 am


திருவள்ளூா்: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மருத்துவ தோ்வாணையம் மூலம் கடந்த 2015-இல் செவிலியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அப்போது, செவிலியா்கள் 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அரசு அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 350-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், பணிக்கு சோ்ந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை என்கின்றனா்.

அதனால், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து வரும் 11-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் கலந்து கொண்டனா்.