சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருவள்ளூரில் இன்றும், நாளையும் கணினி பயிற்றுநா் பணிக்கான கலந்தாய்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் சனிக்கிழமையும் (ஜன. 2), ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 3) கணினி நிலை பயிற்றுநா் நிலை-1 பணிக்கான

Updated On :2 ஜனவரி 2021, 1:02 pm

திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் சனிக்கிழமையும் (ஜன. 2), ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 3) கணினி நிலை பயிற்றுநா் நிலை-1 பணிக்கான கலந்தாய்வு மற்றும் பணியிட ஒதுக்கீடு வழங்கும் முகாம் குறிப்பிட்ட வரிசை எண் படி நடைபெற உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 2018-2019-ஆம் கல்வி ஆண்டில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் போட்டித் தோ்வு நடத்தப்பட்டு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி நாடுநா்களுக்கான பணி ஒதுக்கீடு வழங்குவதற்கான கலந்தாய்வு உஙஐந இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. இதன்படி, வரிசை எண் 1 முதல் 400 வரை வரும் 2-ஆம் தேதி அன்றும், வரிசை எண் 401 முதல் 742 வரை 3-ஆம் தேதியும், திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

எனவே திருவள்ளூா் வருவாய் மாவட்டத்தைச் சோ்ந்த பணி நாடுநா்கள் பணி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கலந்தாய்வு முகாமுக்கு காலை 10 மணிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.