கும்மிடிப்பூண்டியில் கடன் தொல்லைக் காரணமாக பேக்கரி உரிமையாளர் ஒருவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணபுரத்தில் உள்ள எல்.வி.நகரில் வசித்து வந்தவர் ஜெயகோபி (30). இவரது சொந்த ஊர் மதுரை. இவர் கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவில் பேக்கரி நடத்தி வந்தார்.
இவரது மனைவி பாலுமீனா (25). இவர்களுக்கு நிருதுலா என்ற 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஜெயகோபிக்கு பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமானோரிடம் ஜெயகோபி வட்டிக்கு கடன் வாங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடனைத் திரும்பக் கொடுக்க முடியாததால் கடன்காரர்கள் அவருக்கு நெருக்கடிக் கொடுத்து வந்தனராம்.
இதனால் சில நாள்களாக மனமுடைந்துக் காணப்பட்ட ஜெயகோபி, திங்கள்கிழமை இரவு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

