திருவள்ளூர் அருகே தைல மரங்களைக் கடத்திய செதில்பாக்கம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட செதில்பாக்கம் ஊராட்சித் துணைத் தலைவர் செல்லய்யா தலைமையில் ஏராளமான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இந்த மனுவை அளித்தனர்.
மனு விவரம்:
செதில்பாக்கம் ஊராட்சியில் 120 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கிராம மக்கள் ஒப்புதலுடன் வனத்துறையினர் தைலச் செடிகளை நட்டுவைத்து கிராமத்துக்காக ஒப்படைத்தனர்.
கடந்த 30 ஆண்டுகளாக அந்த மரங்களை கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் செதில்பாக்கம் ஊராட்சித் தலைவர், தனது ஆதரவாளர்களுடன் அனுமதியின்றி தைல மரங்களை வெட்டி வேறு மாநிலங்களுக்கு கடத்துகிறார்.
கிராமத்துக்கும், மரங்கள் உள்ள இடத்துக்கும் இடையே 2 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால் உடனடியாக இச்சம்பவம் குறித்து மக்களுக்கு தெரிவதில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தப்படவிருந்த 60 டன் தைல மரங்களை கிராம மக்கள் கைப்பற்றினர்.
எனவே கிராமத்துக்குச் சொந்தமான மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்த செதில்பாக்கம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி வனத்துறையினரிடமும் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

