சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேளாண் விதைப் பண்ணை கண்காணிப்பாளர் தற்கொலை

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அரசு வேளாண் விதைப் பண்ணையில் பணிபுரிந்து வந்த கண்காணிப்பாளர் விஷம்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:55 pm

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அரசு வேளாண் விதைப் பண்ணையில் பணிபுரிந்து வந்த கண்காணிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

÷திருவள்ளூரை அடுத்த தக்கோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி (42).  கொழுந்தளூரில் உள்ள அரசு வேளாண் விதைப் பண்ணையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

÷இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், அஜய், கிஷோர் என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.

÷தங்கமணிக்கு பிறவிலேயே கால் ஊனம் இருந்துள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓர் விபத்தில் அதே காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.÷இதனால் அவர் தினமும் வலியில் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை காலையில் கிராம மக்கள் விதைப் பண்ணைக்கு வந்துள்ளனர்.

÷அப்போது அங்கு தங்கமணி வாயில் நுரையுடன் இறந்து கிடந்ததாகத் தெரிகிறது.

÷ இது குறித்த புகாரின் பேரில், புல்லரம்பாக்கம் போலீஸார் அங்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

÷தங்கமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

÷மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.