திருத்தணி அருகே வெறிநாய் கடித்த 2 குழந்தைகள் உள்பட 12 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
÷திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது முருக்கம்பட்டு காலனி.
÷இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
÷இப்பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களாகவே அதிகளவில் தெரு நொய்கள் சுற்றித் திரிகின்றன.
÷அவற்றில் பெரும்பாலும் வெறிநாய்களாக உள்ளன. அவை அப்பகுதியில் நடந்து செல்வோரை விரட்டிக் கடித்து வருகிறது.
÷கடந்த வாரத்தில் மட்டும் 20 பேரை வெறிநாய் கடித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் சாமிநாதன் என்பவரின் மகள் கன்னியம்மாள் (4) மற்றும் ராமு மகள் தேன்மலர் (3) ஆகிய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.
÷அப்போது அக்குழந்தைகளை வெறிநாய் கடித்தது.
÷மேலும் அந்த காலனி தெருவில் நடந்து சென்ற மகேஷ் (40), ஏழுமலை (50), பாலா (60), சாமிநாதன் (40), சுப்பிரமணி (43) உள்பட 10 பேரை ஒரே நாளில் வெறிநாய் கடித்துள்ளது.
÷அவர்கள் அனைவரும் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
÷இவர்களில் 9 பேர் சிகிச்சைப் பெற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினர்.
÷எனவே முருக்கம்பட்டு காலனி கிராமத்தில் திரியும் தெரு நாய்களைப் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

