சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேல்நிலை நீர்த்தொட்டி மூலம் குடிநீர் வழங்கக் கோரிக்கை

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உரிமையாளர்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:54 pm

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உரிமையாளர் குடியிருப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

÷காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உரிமையாளர் குடியிருப்போர் சங்கத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

÷கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் தசரதன், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷பொதுச்செயலர் மதிமாறன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காக்களூர் ஊராட்சித் தலைவர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

தீர்மானம்:

÷திருவள்ளூர் நகராட்சியையொட்டி காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. ÷இக்குடியிருப்பில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 1994-ம் ஆண்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

÷ஆனால் இதுவரை அதற்கான இணைப்புக் கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த தொட்டி பயனற்று உள்ளது. எனவே இத்தொட்டியில் இணைப்பு ஏற்படுத்தி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.