திருவள்ளூர் அருகே மேம்பாலப் பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
÷திருநின்றவூரை அடுத்த நெமிலிச்சேரி அருகே மீஞ்சூர்- வண்டலூர் இடையே வெளிவட்டச் சாலை மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது.
÷இந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும் "சர்வீஸ்' சாலை அமைப்பதற்காக அங்குள்ள 16 வீடுகளை அகற்ற சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
÷இதையடுத்து அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்பொருட்டு புதன்கிழமை அங்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.÷அப்போது அப்பகுதி மக்கள் அவர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.÷தகவலறிந்த சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும நில எடுப்பு டி.ஆர்.ஓ. மோகனசுந்தரம், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அபிராமி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
÷அப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை சில நாள்கள் ஒத்திவைப்பதாகவும், எனவே சில தினங்களில் இங்கிருந்து மாற்று இடத்துக்குச் செல்ல வேண்டும் என அவர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
÷இச்சம்பவத்தால் நெமிலிச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

