பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து கும்மிப்பூண்டியில் 2 அரசு பஸ்களை சேதப்படுத்தியதாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி அருகே அகரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெரியபாளையம் நோக்கி இரண்டு அரசு பஸ்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், பஸ்களின் மீது கற்களை எறிந்தனர்.இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.இது குறித்த புகாரின் பேரில், ஆரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆரணி அருகே மல்லியன்குப்பம் பகுதியைச் சேர்ந்த நயினார்(42), முத்து(35) ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் கைது:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் மா.செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்த மறியலில் ஈடுபட்ட 39 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

