சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்கக் கோரிக்கை

மீஞ்சூர் அருகே இயங்கி வரும் இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :2 மே 2013, 5:56 pm

மீஞ்சூர் அருகே இயங்கி வரும் இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உப்புநெல்வாயல் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் பா.ஜ.க. விவசாய அணி ஆகியவற்றின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்:

பொன்னேரி வட்டத்துக்கு உள்பட்ட தேவம்பட்டு, உப்புநெல்வாயல் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன.

இப்பண்ணைகளில் இறால்களை சுத்தப்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றுக்காக பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.

மேலும் மண்ணின் தன்மையும் கெட்டு விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.