கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணியில் உள்ள காணியப்பா சமுதாயக் கல்லூரியில் இலவச கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மகளிர் குழுக்களைச் சேர்ந்தவர்கள், வேலையில்லா இளைஞர்கள், கல்வியைத் தொடர முடியாமல் இடையில் நின்ற மாணவ, மாணவிகளுக்கு இப்பயிற்சிகள் மத்திய அரசின் வேலைவாய்ப்பு துறையின் கீழ், இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
தையல் பயிற்சிக்கு 5-ஆம் வகுப்பு படிப்பும், கம்ப்யூட்டர் பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு படிப்பும் தேவை. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் ஆரணி, இருக்கம் தெருவில் உள்ள காணியப்பா சமுதாயக் கல்லூரிக்கு தங்கள் குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ், 3 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். பயிற்சிக் காலத்தில் பயணப்படி மற்றும் ஊக்கத் தொகை ஏதும் நிர்வாகத்தால் வழங்கப்பட மாட்டாது. பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
இது தொடர்பாக மேலும் தகவல் அறிய விரும்புவோர், ஆரணி காணியப்பா சமுதாயக் கல்லூரியை 044-27927493, 7708781075, 9789446438, 8056524887, 8056548883 ஆகிய போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

