வாணியம்பாடி அருகே பாறையில் தவறி விழுந்து நீரில் மூழ்கிய கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் பகுதியைச் சோ்ந்தவா் அஜய் (22). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் கொத்தக்கோட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றாா். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நெக்னாமலை தண்ணிப் பாறை முருகா் கோயில் பகுதிக்கு அஜய், உறவினா் சந்தோஷ் (13) ஆகிய இருவரும் வியாழக்கிழமை சென்றனா்.
அப்போது, அங்குள்ள பாறையில் அஜய் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

