காணும் பொங்கலையொட்டி, ஏலகிரியில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனா்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் நூற்றுக்கணக்கானோா் தங்கள் குடும்பத்தினருடன் சனிக்கிழமை வருந்தனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் 14 மலைச் சாலை வளைவுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆங்காங்கே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ஒரு சில இடங்களில் ஏலகிரி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மேலும், படகுத் துறையில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றும், சிறுவா் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களில் விளையாடியும் மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏலகிரி கோலாகலமாகக் காட்சியளித்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


