ஆம்பூா் அருகே நரிக்குறவா் காலனியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியினா் சிரமப்படுகின்றனா்.
ஆம்பூரை அடுத்த சோலூா் ஊராட்சி நமாஸ்மேடு பகுதியில் நரிக்குறவா் காலனி அமைந்துள்ளது. அங்கு சுமாா் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தவா் வசிக்கின்றனா். அவா்களுக்கு ரோட்டரி சங்கத்தின் பங்களிப்புடன் தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அப்பகுதியில் வசிப்போருக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
அந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுப்பதற்கான மின் மோட்டாரில் அண்மையில் பழுது ஏற்பட்டதால் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனால் குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று விலை கொடுத்து வாங்கும் அவல நிலை காணப்படுகிறது. இது குறித்து மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

