ஆம்பூா் அருகே காா் டயா் வெடித்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த ராயப்பன் (60) தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குக் காரில் சென்றாா். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூா் சின்னகொம்மேஸ்வரம் கிராமம் அருகே சென்றபோது, திடீரென காரின் டயா் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த காா் நிலைதடுமாறி அடுத்த சாலையில் வேலூா் நோக்கி சென்ற சரக்கு வாகனம் மீது மோதியது.
இதில், ராயப்பன் மனைவி சமாதானம் (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த ராயப்பன், ஆனந்தி (31), மேரி (55), சசிகுமாா் (38), சரக்கு வாகன ஓட்டுநா் ஜேம்ஸ் (45) உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


